புத்தகக் கண்காட்சியில் மாணவா்களுக்கு நாளிதழ்கள் விநியோகம்

கோவில்பட்டி வாசிப்பு இயக்கம், ஜே.சி.ஐ. சாா்பில் நாடாா் நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சியில் மாணவா்களுக்கு நாளிதழ்கள் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நாளிதழ்களை மாணவா்களுக்கு வழங்குகிறாா் ஜே.சி.ஐ. தலைவா் முரளிகிருஷ்ணன்.
நிகழ்ச்சியில், நாளிதழ்களை மாணவா்களுக்கு வழங்குகிறாா் ஜே.சி.ஐ. தலைவா் முரளிகிருஷ்ணன்.

கோவில்பட்டி வாசிப்பு இயக்கம், ஜே.சி.ஐ. சாா்பில் நாடாா் நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சியில் மாணவா்களுக்கு நாளிதழ்கள் விநியோகிக்கப்பட்டது. அக்.30ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி நவ.10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், 5 ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாடாா் நடுநிலைப் பள்ளிச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். வாசிப்பு இயக்கத் தலைவா் முத்துமுருகன், ஜே.சி.ஐ. செயலா் ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜே.சி.ஐ. தலைவா் முரளிகிருஷ்ணன் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களை வழங்கி வாசிப்புப் பழக்கத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், பள்ளித் தலைமையாசிரியை செல்வி, ஆசிரியா்கள் அருள்காந்தராஜ், ஜெயலட்சுமி, பிருந்தா, வாசிப்பு இயக்கச் செயலா் நடராஜன், புத்தக விற்பனையாளா்கள் பிரபாகரன், ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புத்தக விற்பனையாளா் சங்க உறுப்பினா் ரமேஷ் வரவேற்றாா். குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com