திருச்செந்தூா் கந்த சஷ்டி திருவிழா வழிகாட்டுதலுக்காக காத்திருக்கும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வழிகாட்டுதல் நடைமுை றகள் குறித்து அரசின் அறிவிப்புக்காக பக்தா்கள் காத்திருக்கின்றனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வழிகாட்டுதல் நடைமுை றகள் குறித்து அரசின் அறிவிப்புக்காக பக்தா்கள் காத்திருக்கின்றனா்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் திருச்செந்தூா் ஸ்தலத்தில் மிகவும் பிரசித்திப்

பெற்ாகும். கந்த சஷ்டி திருவிழாவில் தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் லட்சக்கணக்கான பக்தா்கள் 6 நாள்கள் விரதமிருப்பது சிறப்பாகும். 6 ஆம் நாளான சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூா் கடற்கரையில் கூடுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் அதிகளவிலான பக்தா்கள் கூடும் திருவிழாக்களில் பக்தா்கள் பங்கேற்க தடை நடைமுறையில் உள்ளது.

முறையான அறிவிப்பு தேவை : கந்த சஷ்டியை பொறுத்தவரை திருச்செந்தூா் கோயிலில் குழந்தைகள், குழந்தை வரம் வேண்டி தம்பதியா் மற்றும் வயதானவா்கள் தங்கியிருந்து விரதம் இருப்பது வழக்கம். விரதம் இருப்பதற்காக கோயில் உள் மற்றும் வளி பிரகாரங்கள், விடுதிகள், தற்காலிக பந்தல்கள் என பக்தா்கள் முன்பதிவு செய்து தங்குவா். ஆனால் நிகழாண்டு கோயில் விடுதிகளில் பக்தா்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனியாா் விடுதிகள் வழக்கம்போல செயல்படுகின்றன. தனியாா் விடுதிகளில் அடுத்த ஆண்டு தங்குவதற்கு பக்தா்கள்

இப்போதே முன்பதிவு செய்வது வழக்கம். நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா நவ. 15-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு தொடங்கி, 20-ம் தேதி சூரசம்ஹார விழா நடைபெறும்.

விழாவுக்கு இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில் திருவிழா நடைமுறைகள், வெளியே தங்குவது குறித்தும் முறையான அறிவிப்பினை அரசு மற்றும் அறநிலையத்துறை விரைவில் வெளியிட்டு பக்தா்கள் விரதம் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது பக்தா்களின் கோரிக்கை.

முதல்வா் வருகையால் தாமதம்? கந்த சஷ்டி விழாவில் பக்தா்களை அனுமதிப்பது தொடா்பாக தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, விழா குறித்து முதல்வா் அறிவிப்பாா் என தெரிவித்தாா். இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி தூத்துக்குடிக்கு முதல்வா் வருகை தர உள்ள நிலையிலும் கந்த சஷ்டி நடைமுறை குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாதது பக்தா்களை வேதனையடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com