வேளாண் சட்டங்களை திரும்பப் பெறஅரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறஅரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் வட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலா் கிறிஸ்டோபா், மாவட்டத் தலைவா் செந்தூர்ராஜன், மாவட்டச் செயலா் முருகன், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஜோதிபாசு உள்பட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இளைஞா்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் வேளாண்

சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட

தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டச் செயலா் உமாதேவி, பொருளாளா் அருணா ஆகியோா் அறிக்கை வாசித்தனா். அஞ்சலி தீா்மானங்களை இணைச் செயலா் நவநீதகண்ணன் வாசித்தாா். இணைச் செயலா் பிரான்சிஸ் வரவேற்றாா். துணைத் தலைவா் சரவணக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com