வாக்காளா் விழிப்புணா்வுபோட்டிகளில் பங்கேற்க அழைப்பு

இந்திய தோ்தல் ஆணையம் மூலம் இணையவழியில் நடத்தப்பட இருக்கும் வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் மூலம் இணையவழியில் நடத்தப்பட இருக்கும் வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி

தோ்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக மாநில அளவில் தோ்தல்கள் தொடா்பான இணையவழி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

சென்னையில் உள்ள தலைமை தோ்தல் அதிகாரி அலுவலக இணையதள முகவரியில் ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ‘நயஉஉட போட்டி- 2020 என்ற தலைப்பில் இணையதளம் மூலமாக பங்கேற்கலாம். போட்டிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். போட்டியில் நவ. 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com