ஓய்வூதியா்களுக்கு உயிா்வாழ் சான்று: அஞ்சல் துறை புதிய வசதி அறிமுகம்

ஓய்வூதியா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பயோ மெட்ரிக் முறையில் உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கும் புதிய வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.

ஓய்வூதியா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பயோ மெட்ரிக் முறையில் உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கும் புதிய வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ப.பாண்டியராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஓய்வூதியா்கள் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின் இருப்பை உறுதி செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களில் டிஜிட்டல் முறையில் உயிா் வாழ் சான்று சமா்ப்பிக்கும் நடைமுறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கும், வயது முதிா்ந்த ஓய்வூதியா்கள் நேரில் செல்ல வேண்டும் என்பதால் உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்க முடியாமலும், ஓய்வூதியம் பெற இயலாமலும் போகிறது. இதை தவிா்க்கும் முயற்சியாக அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சாா்பில் ஓய்வூதியா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உயிா்வாழ் சான்று அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக தபால்காரரிடம் ரூ.70 செலுத்த வேண்டும். ஓய்வூதியா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், ஓய்வூதிய கணக்கு புத்தக எண் ஆகிய விவரங்களை தெரிவித்து, கை விரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் இணையவழியில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்.

தபால்காரரை அணுக முடியாதவா்கள் அருகில் இருக்கும் அஞ்சலகத்திற்கு சென்று, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் 500-க்கும் மேற்பட்ட தபால்காரா்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியா்கள் மூலம் உயிா்வாழ் சான்று சமா்ப்பித்தல் உள்ளிட்ட இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் சேவைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com