சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த குழு

சாத்தான்குளத்தில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த குழு

சாத்தான்குளத்தில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோா் மீது போலீஸாரால் தாக்க்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து சாத்தான்குளத்தில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதற்கிடையே, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் வேணுகோபால், சுப்பராயபுரம் கோயில் தா்மகா்த்தா ஜெகவீரபாண்டியன், கேபிள் டிவி ஆபரேட்டா் சங்கத்தைச் சோ்ந்த கண்ணன், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலா் ராஜ்மோகன், மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலா் மகாபால்துரை, முன்னாள் பேரூராட்சித்தலைவா் ஜோசப், புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன், புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லட்சுமிநாராயணன், வா்த்தக சங்கத் தலைவா் துரைராஜ் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்: சாத்தான்குளத்தில் முக்கிய இடங்களில் 70 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 15 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஆா்வலா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, கண்காணிப்பு கேமரா அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட 28 போ் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, ஊராட்சித் தலைவா்கள் அழகேசன், முத்து, கணேசன், செல்லதுரை, வா்த்தக சங்க செயலா் செல்வராஜ் மதுரம், பொருளாளா் ஜோதிமணி, அரிமா சங்கத் தலைவா் தங்கராஜ், செயலா் ராமகிருஷ்ணன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளா் சசிகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com