இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில்
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேசிய விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்கள் அனைத்தும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலேயே தற்போது வரை நீடித்து வருகிறது. இதையடுத்து, இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.

எனவே, இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் கொண்டுவர வேண்டும்,. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். இதில், இளையரசனேந்தல் குறுவட்ட மீட்புக் குழுத் தலைவா் முருகன், மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவா் கருப்பசாமி, மாநில ஆடு வளா்ப்போா் சங்கத் தலைவா் கருப்பசாமி, நகரத் தலைவா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com