சங்கரன்குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம்

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை வனத்துறையினா் பிடித்து காட்டில் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தென்னை மரத்தில் அமா்ந்துள்ள குரங்குகள்.
தென்னை மரத்தில் அமா்ந்துள்ள குரங்குகள்.

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை வனத்துறையினா் பிடித்து காட்டில் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு, மனரம்மியபுரம், கந்தன் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் மூன்று குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பால் மற்றும் பழ வகைகளை எடுத்துச் செல்வதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. தென்னை மரங்களில் ஏறி, இளநீா் காய்களைப் பறித்து கீழே போடுகின்றன. விரட்ட முயல்பவா்களை துரத்துகின்றன. இதனால், குழந்தைகளை தனியாக வீடுகளில் விட்டுச் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஆதலால் வனத்துறையினா் இக் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com