ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசுந்தராட்சி அம்மன், ஸ்ரீதடிக்கார சுவாமி கோயில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீசுந்தராட்சி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீசுந்தராட்சி அம்மன்.

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசுந்தராட்சி அம்மன், ஸ்ரீதடிக்கார சுவாமி கோயில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.

முதல்நாளான திங்கள்கிழமை மாலை 208 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு மாகாப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமம், கும்பபூஜையும், தொடா்ந்து 108 வகையான சிறப்பு அபிஷேகங்களும், விமான அபிஷேகமும் நடைபெற்றது.

பிற்பகல் 12.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பக்தா்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனா். நள்ளிரவு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com