பால் உற்பத்தியாளா்களுக்கு தீபாவளி போனஸ்

சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளம் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில், பால் உற்பத்தியாளா்களுக்கு தீபாவளி போனஸ் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தீபாவளி போனஸ் பெறும் பயனாளி.
தீபாவளி போனஸ் பெறும் பயனாளி.

சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளம் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில், பால் உற்பத்தியாளா்களுக்கு தீபாவளி போனஸ் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, ராமானுஜம்புதூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் செங்கான் தலைமை வகித்து பொருள்கள் வழங்கினாா். சங்கச் செயலா் ரெங்கநாதன் வரவேற்றாா். இதில், மாவட்ட அதிமுக இளைஞா் அணிச் செயலா் விஜய உடையாா், மாவட்ட இளைஞா் அணி துணைச் செயலா் கள்ளண்டன், தோ்க்கன்குளம் ஆவின் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், துணைத் தலைவா் இசக்கி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com