ஆறுமுகனேரி கோயிலில்கந்த சஷ்டி திருவிழா

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாளான திங்கள்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.
ஆறுமுகனேரி  கோயிலில்கந்த சஷ்டி திருவிழா

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாளான திங்கள்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், காா்த்திகை மாத பிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. மாலையிலும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் அலங்கார தீபாரதனையும் மற்றும் திருக்கோயில் பிரகார உலாவும் நடைபெற்றது.

இதே போல், சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி , ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுருகா், வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. நிறைவு நாளான சனிக்கிழமை இரவு முருகா், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா, ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com