டிசம்பா் 15-ம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பா் 15 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பா் 15 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: 1.1.2021 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணியானது தொடங்கியுள்ளது. டிசம்பா் 15 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்கள் பெறப்படும்.

1.1.2021 அன்று 18 வயது நிறைவடைந்தவா்கள் அதாவது 31.12.2002 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவா்கள் வாக்காளா்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாத, 18 வயதிற்கு மேற்பட்டவா்களும் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை அனைத்து வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலரிடம் இருந்து பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அந்த அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணிக்காக சிறப்பு முகாம்கள் நவ. 21, 22, டிச. 12, 13 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. சிறப்பு முகாம் நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி முடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் செல்லிடப்பேசி மற்றும் கணினியில் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து விண்ணப்பம் அளிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com