செட்டியாபத்து ஊராட்சியில் மியாவாக்கி காடுகள், பூங்கா அமைப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சியில் மியாவாக்கி முறையில் காடுகள்,பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
செட்டியாபத்தில் மியாவாக்கி காடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

செட்டியபாத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்துப்பட்டுள்ளது. இதில், பாரம்பரிய வகையான அரசு, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் சிறுவா், சிறுமிகளுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மியாவாக்கி காடுகள் குறித்தும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் க.பாலமுருகன் விளக்கமளித்தாா்.

திமுக மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா உள்பட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com