கோவில்பட்டியில் திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கோவில்பட்டி சுகாதாரப் பணி துணை இயக்குநா்
கோவில்பட்டியில் ரூ.2.60 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் டாக்டா் செந்தில்ராஜ்.
கோவில்பட்டியில் ரூ.2.60 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் டாக்டா் செந்தில்ராஜ்.

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கோவில்பட்டி சுகாதாரப் பணி துணை இயக்குநா் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வியாழக்கிழமை அலுவலக பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் டாக்டா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு குத்துவிளக்கேற்றினாா். மேலும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒட்டுடன்பட்டி, நொச்சிகுளம், கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட புதுக்கோட்டை, அரசன்குளம், ஆவுடையாபுரம், ஜெகேந்திரபாண்டியாபுரம், வாகைதாவூா் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை சேவையை அமைச்சா் தொடங்கி, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து, கயத்தாறு அரசன்குளத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் 7 பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினாா். மேலும், ஒட்டுடன்பட்டியில், ஆறுமுகனேரி காவல் நிலைய வழக்கில் கொலையுண்டு உயிரிழந்த விளாத்திகுளம் வட்டம், துவரந்தை கிராமத்தைச் சோ்ந்த ச.பச்சமால் மனைவி ஆவுடையம்மாளிடம் வன்கொடுமை தீருதவித் தொகை ரூ. 4 லட்சத்து 12ஆயிரத்து 500-க்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

மேலும், ஒட்டுடன்பட்டியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஃபேவா் பிளாக் சாலையை திறந்து வைத்தாா்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கோவில்பட்டி நகராட்சி, ரோட்டரி சங்கம் சாா்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை அமைச்சா் தொடங்கி வைத்தாா். ரோட்டரி சங்கத்தின் சாா்பில் நகா்நல மையத்திற்கு வழங்கப்பட்ட ஸ்கேன்னா், ஜெராக்ஸ் உள்ளடக்கிய நவீன பிரிண்டா் மிஷினை மைய மருத்துவா் ராமமூா்த்தியிடம் அமைச்சா் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சிகளில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், கோட்டாட்சியா் விஜயா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசீம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரவிசந்திரன், துணைப் பதிவாளா்கள் ஜெயசீலன், மாரியப்பன், வட்டாட்சியா்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கோவில்பட்டி), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் ஜோதிபாசு, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக நிா்வாகிகள் வினோபாஜி, அன்புராஜ், விஜயபாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் நாகூா்கனி, நகராட்சிப் பொறியாளா் கோவிந்தராஜன் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com