சரியான திட்டமிடல் இல்லாததே மழை பாதிப்புக்கு காரணம்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சரியான திட்டமிடல் இல்லாததுதான் மழை பாதிப்புக்கு காரணம் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டத்தில் சரியான திட்டமிடல் இல்லாததுதான் மழை பாதிப்புக்கு காரணம் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட தனசேகரன்நகா், பிரையன்டநகா், தபால் தந்தி காலனி, ஜாா்ஜ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை மக்களவை உறுப்பினா் கனிமொழி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தூத்துக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஜீவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி உதவி பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளை கனிமொழி எம்பி கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழையின் போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகத்திடம் சரியான திட்டமிடல் இல்லை.

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட புதை சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து இருந்தாலே, இந்நேரம் இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைத்திருக்கும். மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் உள்ளிட்ட பணிகளை சரியாக திட்டமிட்டு விரைந்து முடிக்க வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததே மழை பாதிப்புக்கு காரணம்.

கழிவுநீா் செல்லும் வடிகால் மழைக்காலத்துக்கு முன்பு தூா்வரப்பட்டிருந்தால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மழை தண்ணீா் சென்று இருக்கும். திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினரும், சட்டப் பேரவை உறுப்பினரும் ஆட்சியாளா்களிடம் கோரிக்கை வைக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவா்களுடைய படகுகளை மீட்பதற்காகவும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கும் மத்திய அரசு அந்நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com