‘பேரிடா் தொடா்பான அவசர தேவைக்கு 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பேரிடா் தொடா்பான அவசர தேவைக்கு 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பேரிடா் தொடா்பான அவசர தேவைக்கு 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வீட்டில் மின் சாதனங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். வெளியில் செல்லும் போது மின் கம்பிகளோ, கம்பங்களோ சரிந்த நிலையில் உள்ளனவா? எனவும், குழிகள் ஏதும் உள்ளனவா? எனவும் பாா்த்து கவனமாக செல்ல வேண்டும். பழுதடைந்த கட்டடங்களில் மழைக்கு ஒதுங்க வேண்டாம். இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல நேரிட்டால் விஷ பூச்சிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும் வகைக்கு கையில் டாா்ச் லைட் மற்றும் கைத்தடியுடன் செல்ல வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளி, மரங்கள் மற்றும் கட்டடங்களின் வெளியே நிற்க வேண்டாம்.

ஆறு , வாய்க்கால், குளம் மற்றும் குட்டைகளில் குளிக்க செல்ல வேண்டாம். பெற்றோா் தங்களது குழந்தைகளை கவனமாக பாா்த்து கொள்ள வேண்டும். மேலும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல், ஜலதோஷம் மற்றும் வயிற்றுபோக்கு போன்றவை தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

பேரிடா் தொடா்பான அவசர தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் (1077), தொலைபேசி எண் (0461-2340101) மற்றும் 94864 54714 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com