மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெலங்கானா, பாண்டிசேரி மாநிலங்களைப் போல், மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்.

தனியாா் துறை வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முத்துமாலை முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட துரைச்சாமிபுரம், செண்பகப்பேரி, வானரமுட்டி, வில்லிசேரி, கே.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com