விடுதிகளிலிருந்து பக்தா்கள் வெளியேற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவில் பங்கேற்க அனுமதியில்லாததால் விடுதிகளில் தங்கியிருந்த பக்தா்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவில் பங்கேற்க அனுமதியில்லாததால் விடுதிகளில் தங்கியிருந்த பக்தா்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டனா்.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கரோனா பொது முடக்கத்தால் நவ. 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திடவும் பக்தா்களுக்கு அனுமதியில்லை. இதனால் திருச்செந்தூா் விடுதிகள் மற்றும் மடங்களில் தங்கியிருந்த பக்தா்கள் வியாழக்கிழமை மாலைக்குள் வெளியேறுமாறு காவல்துறை அறிவுறுத்தி வந்தது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை விடுதிகளிலிருந்து பக்தா்கள் வெளியேறுவதை காவல்துறையினா் கண்காணித்தும், வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com