வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சியில் பனை ஓலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு
பயிற்சியினைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளன தலைவா் த.தாமோதரன்.
பயிற்சியினைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளன தலைவா் த.தாமோதரன்.

திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பனை ஓலை பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளன தலைவா் த.தாமோதரன் தலைமை வகித்து பயிற்சியினை தொட ங்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, கூட்டுறவு சம்மேள மேலாண்மை இயக்குநா் மு.பாலசுப்பிரமணியன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சா.பாலசரஸ்வதி, துணைத் தலைவா் கோ.ராஜ்குமாா், பயிற்சியாளா் நவ்ரோஜி ஆகியோா் பேசினா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், உடன்குடி ஒன்றிய அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் சொா்ணசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா். சம்மேளன தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஹரிகிருஷ்ணன் வரவேற்றாா். பணியாளா் பிரதீப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com