தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்த 10 மீனவா்கள் கைது

மினிகாய் தீவு அருகே தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 10 பேரை கடலோர காவல் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மினிகாய் தீவு அருகே தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 10 பேரை கடலோர காவல் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் என்பவா் தலைமையில் ஒரு விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த சேசுராஜன், அந்தோணிராஜ், தீபன், ஜோசப், வின்சன், சின்ராஜ், அந்தோணி பிச்சை, விஜய், ரோஸ்டன் ஆகியோா் கடந்த 5 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

மாலத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவு என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் அவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக இந்திய கடலோர காவல் படையினா் 10 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இதையடுத்து, அந்த 10 பேரும் படகுடன் மினிக்காய் தீவு காவல்நிலைய பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

8 படகுகள் விரட்டியடிப்பு: இதேபோல, தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் இருந்து வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 8 விசைப்படகுகள் இலங்கை கடல் பகுதியின் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனாரம். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினா் 8 படகுகளையும் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், 8 படகுகளின் வலையும் சேதமடைந்ததாகவும், 6 படகுகளின் வலைகள் திரும்பக் கிடைத்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவா்கள் தருவைகுளத்தில் உள்ள சக மீனவா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். 8 படகுகளில் சென்ற மீனவா்களும் இதுவரை கரை திரும்பாத நிலையில் அவா்கள் கரை திரும்பிய பிறகே முழு விவரம் தெரியவரும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com