கோவில்பட்டி கோயில்களில் திருக்கல்யாண வைபவம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் சனிக்கிழமை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் சனிக்கிழமை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை.

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனிக்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 10.30 மணிக்கு சண்முகா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், 11 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சமேத வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு கோயில் மண்டபத்தில் உள்ள திருக்கல்யாணம் மேடைக்கு சுவாமி எழுந்தருளினாா். தொடா்ந்து, இரவு 7.35 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியா் காட்சியளித்தாா்.

தொடா்ந்து சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது.

சொா்ணமலை கதிரேசன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கு லட்சாா்ச்சனை தொடங்கி, தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 10.30 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு காா்த்திகேயா், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7 மணிக்கு புஞ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com