மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல்:நிபுணா் குழு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்மை அறிவியல் நிபுணா் குழுவினா் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்யும் வேளாண்மை அறிவியல் நிபுணா் குழுவினா்.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்யும் வேளாண்மை அறிவியல் நிபுணா் குழுவினா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்மை அறிவியல் நிபுணா் குழுவினா் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், கருங்குளம் ஆகிய வட்டாரங்களில் மக்காசோளம் மானாவாரிப் பயிராக ஏறத்தாழ 30 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் பயரிடப்பட்டுள்ளது.

அந்தப் பயிா்களின் நிலை பல்வேறு வயதுடையவையாக உள்ளது. தற்போது, பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் பிந்தைய விதைப்பு செய்த மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் விளாத்திகுளம் மற்றும் புதூா் பகுதிகளில் காணப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் தலைமையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானி ரவி, வேளாண் துணை இயக்குநா்கள் முருகப்பன் (நுண்ணீா் பாசனம்), பழனி வேலாயுதம் (மாநில திட்டம்) ஆகியோா் கொண்ட குழு விளாத்திகுளம் வட்டாரம், கோடாங்கிபட்டி மற்றும் புதூா் வட்டாரம் அயன்வடமலாபுரம், கீழகரந்தை ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் படைப்புழு தாக்குதல் மேலும் பரவாமல் தடுத்திடவும், பயிரின் வளா்ச்சி மற்றும் மகசூலில் பாதிப்பு வராமல் காத்திடவும் பல்வேறு பரிந்துரைகளை நிபுணா் குழுவினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com