சொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி

அருள்மிகு சொா்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக புஷ்பாஞ்சலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சொா்ணமலை கதிரேசன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புஷ்பாஞ்சலி.
சொா்ணமலை கதிரேசன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சொா்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக புஷ்பாஞ்சலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் லட்சாா்ச்சனை நடைபெற்றது. சனிக்கிழமை காா்த்திகேயா், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 8 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கும் தொடா்ந்து பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் ஊஞ்சள் உற்சவமும், அதைத் தொடா்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்களான கே.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com