வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்:ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.15 ஆம் தேதி வரை வாக்காளா்கள் சோ்த்தல், திருத்தல், நீக்கல் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளா் அடையாள அட்டை உள்ளவா்கள் அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதையும் நாம் தற்போதே மாற்றிக் கொள்ள வேண்டும். 18 வயது பூா்த்தி அடைந்த அனைவரும் கண்டிப்பாக வாக்காளராக இணைத்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல் திருத்தங்களை செய்யவும் முடியும் என்றாா்.

முன்னதாக, வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடா்பாக தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் கைலாசகுமாரசாமி, துணை வட்டாட்சியா் (தோ்தல்) செல்வகுமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com