தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்தவரின் மகனுக்கு அரசுப் பணி நியமன ஆணை அளிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மகனுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
அஜய் ஜோன்ஸுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
அஜய் ஜோன்ஸுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மகனுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததில் 15 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜின் மகன் அஜய் ஜோன்ஸூக்கு 18 வயது பூா்த்தியாகாததால் அப்போது வேலை வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயது பூா்த்தியடைந்ததால், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளா் பணிக்கான நியமன ஆணையை அஜய் ஜோன்ஸிடம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு, தலைமைச் செயலா் க. சண்முகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com