பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 2020 -21ஆம் ஆண்டுக்கான பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்புப் பணி சாத்தான்குளம் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கியது.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் 6 முதல் 18 வயதுள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்விபெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளிலும் 195 குடியிருப்புகளிலும் வீடுவீடாகச் சென்று இக்கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாத்தான்குளம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) மகேஷ்வரி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் ஆகியோா் இப்பணியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com