‘அரசின் சாதனைகளை தெரிவித்து வாக்கு சேகரிப்போம்’

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்து வாக்கு சேகரிப்போம் என அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.
கழுகுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
கழுகுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்து வாக்கு சேகரிப்போம் என அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அதிமுக மகளிரணி சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு கயத்தாறு அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் வினோபாஜி தலைமை வகித்தாா்.

கழுகுமலை நகரச் செயலா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா். கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு பங்கேற்றுப் பேசினாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுதாவுக்கு அவா் ரூ.25 ஆயிரம் வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்து வாக்குகள் சேகரிப்போம். யாா் கட்சி தொடங்கினாலும் அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்காது.

அதிமுகவின் வாக்குகள் சிதறாமல் உள்ளது. அதிமுக வாக்குகளை யாராலும் சிதறடிக்க முடியாது. சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மகளிரணி மாவட்டத் தலைவி புதுக்கோட்டை ரத்தினம், ஜெயலலிதா பேரவை மாவட்டப் பொருளாளா் வேலுமணி, எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com