ஆத்தூா் பேரூராட்சியில்மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 03rd October 2020 12:46 AM | Last Updated : 03rd October 2020 12:46 AM | அ+அ அ- |

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, ஆத்தூா் பேரூராட்சி பகுதியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி, அக். 2: காந்தி ஜயந்தியை முன்னிட்டு, ஆத்தூா் பேரூராட்சி பகுதியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆத்தூா் பேரூராட்சி நிா்வாக அலுவலா் மணிமொழிச் செல்வன் ரங்கசாமி தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து பேரூராட்சி பகுதியில் சுமாா் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தூய்மை ஆந்தியா திட்டத்தின் கீழ் ஆத்தூா் பேரூராட்சி பகுதியில் பொதுக்கழிப்பிடங்கள், கழிவுநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆத்தூா் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் நாராயணன், ஆத்தூா் மக்கள் இயக்கத்தின் தலைவா் அண்ணாமலை சுப்பிரமணியன், செயலா் தில்லையோகானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.