திருச்செந்தூா் கோயில்இணை ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 03rd October 2020 12:39 AM | Last Updated : 03rd October 2020 12:39 AM | அ+அ அ- |

இணை ஆணையா் கல்யாணி.
திருச்செந்தூா், அக். 2: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக (பொறுப்பு) கல்யாணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்(படம்).
இக்கோயிலில் கடந்த செப். 16ஆம் முதல் இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலராக அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் அ.தி.பரஞ்சோதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா். இந்நிலையில், அவருக்குப் பதிலாக, ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் இணை ஆணையா் கல்யாணி, திருச்செந்தூா் கோயிலுக்கு இணை ஆணையராக கூடுதல் பொறுப்பை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.