உடன்குடி: உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில், விவசாயம், தொழில்வளம் சிறக்க வேண்டி 208 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகா், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் செய்திருந்தாா்.