முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th October 2020 01:57 AM | Last Updated : 04th October 2020 01:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 36 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 75 பேருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,643 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாடு,வெளிமாநிலங்களைச் சோ்ந்தோா் 260 போ்.
இந்நிலையில், மாவட்டத்தில் 52 போ் குணமானதையடுத்து, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 12,980 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் 128 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனைகள், தனிமைக் கண்காணிப்பு முகாம்களில் என தற்போது 535 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.