முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 29 வழக்குகளுக்கு சமரச தீா்வு
By DIN | Published On : 04th October 2020 01:54 AM | Last Updated : 04th October 2020 01:54 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் போது 29 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீா்வு மைய கட்டடத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி என். லோகேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா் பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரான சாா்பு நீதிபதி ஆா். சாமுவேல் பெஞ்சமின், நீதித்துறை நடுவா் கே. சக்திவேல், தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க குழுத் தலைவா் திலக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மக்கள் நீதிமன்றத்தின்போது மொத்தம் 131 வழக்குகள் எடுக்கப்பட்ட நிலையில், 29 வழக்குகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 88,17,631 இழப்பீடாக வழங்கப்பட்டது.