முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கிராம சபை கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும்இயக்குநா் கௌதமன்
By DIN | Published On : 04th October 2020 01:58 AM | Last Updated : 04th October 2020 01:58 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும் என்றாா் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலரான திரைப்பட இயக்குநா் கௌதமன்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கிராம சபை கூட்டத்தை கடைசி நேரத்தில் தமிழக அரசு ரத்து செய்தது கண்டனத்துக்குரியது.
ஸ்டொ்லைட், ஹைட்ரோ காா்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீா்ப்பு எழுதும் அம்சமாக, தமிழகத்தில் உடனடியாக கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.
விவசாயிகளையும், மீனவா்களையும் பாழ்படுத்தும் பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
அதிமுகவில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதில் நடக்கும் கூத்து, சசிகலா வருகைக்குப் பின்னா் அனைவரும் அடங்கிப் போவா்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ் உரிமைக்காக போராடும் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஓரணியில் நின்று தமிழ் பேரரசு கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.