திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

திரையரங்குகள் மூலமாகத்தான் மக்கள் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர். திரைப்படங்கள் மக்களைச் சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
திரையரங்குகள் மூலமாகத்தான் மக்கள் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர். திரைப்படங்கள் மக்களைச் சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
திரையரங்குகள் மூலமாகத்தான் மக்கள் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர். திரைப்படங்கள் மக்களைச் சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

கோவில்பட்டி: திரையரங்குகள் மூலமாகத்தான் மக்கள் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர். திரைப்படங்கள் மக்களைச் சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு,  செய்தியாளர்களிடம் பேசியது: 

அதிமுகவில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் ஓ.பி.எஸ். துணையாக இருக்கிறார். அதிமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்தன.

தேர்தல் நிலைப்பாடு, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. யார் முதலமைச்சர் என்கிற கேள்வி அங்கு எழவில்லை. வெளியில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் பிரச்னையே இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை தனது டிவிட்டர் பதிவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கழக ஒருங்கிணைப்பாளர் என்பதால் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று தான். இதில் அரசியல் எதுவுமில்லை. இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாகத்தான் தெரியும்.

கரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத நிலையில் திரையரங்கு மூடப்பட்டிருப்பதால் தயாரிப்பாளர்களின் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஓ.டி.டி.யில் திரைப்படங்களை வெளியிட்டனர். இது கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமான ஏற்பாடாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். தற்காலிக ஏற்பாடாக இருந்தால் மகிழ்ச்சி. நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும்.

திரையரங்குகள் மூலமாகத்தான் மக்கள் திரைப்படங்களைப் பார்த்து வருகின்றனர். திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாவதை தடுப்பது பற்றி திரைப்படத் துறையினர் கலந்து பேசி வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு வரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com