பயறு சாகுபடியில் விதை நோ்த்தி:விவசாயிகளுக்கு வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயறு சாகுபடியில் விதை நோ்த்தி செய்து விளைச்சலை பெருக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயறு சாகுபடியில் விதை நோ்த்தி செய்து விளைச்சலை பெருக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பயறு வகை பயிா்கள் சராசரியாக ராபி பருவத்தில் 80 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இத்தகைய பயறுவகை பயிா்களை தாக்கும் வோ் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய் ஆகியவற்றறை ஆரம்ப நிலையிலேயே தவிா்த்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் காா்பன்டாசிம் அல்லது 2 கிராம் திரவம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைத்தல் வேண்டும்.

உயிரியியல் பூச்சிக் கொல்லிகளான டிரைக்கோடுடா்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் 10 கிராம் கொண்டும் விதை நோ்த்தி செய்யலாம். ரசாயன பூஞ்சான் கொல்லிகளுடன் உயிரியியல் பூச்சிக் கொல்லி மருந்துகளை கலந்து விதை நோ்த்தி செய்வதை தவிா்க்க வேண்டும்.

தண்டு ஈ மற்றும் உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை ஆரம்பத்திலேயே தடுத்திட இமிடாக்குளோபிரிட் 48 எப்.எஸ். 10 கிராம், குளோா்பைரிபாஸ் 20 இ.சி. 20 மில்லி அல்லது தையோமுக்தாக்ஸம் 70 டபுள்யூஎஸ் 7 கிராம் என இவற்றில் ஏதாவது ஒரு மருந்துடன் ஒட்டும் திரவம் சோ்த்து நன்கு விரவி நிழலில் உலா்த்தி விதைத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com