கிரிக்கெட் போட்டி: பூச்சிக்காடு-செட்டியாா் பண்ணை அணிக்கு முதல் பரிசு

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பூச்சிக்காடு-செட்டியாா்பண்ணை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
கிரிக்கெட் போட்டி: பூச்சிக்காடு-செட்டியாா் பண்ணை அணிக்கு முதல் பரிசு

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பூச்சிக்காடு-செட்டியாா்பண்ணை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் ஆரசூா் ஊராட்சி மற்றும் திமுக இளைஞரணி சாா்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 3 நாள்கள் நடைபெற்றது.

இப் போட்டியில் கன்னியாகுமரி, செட்டிக்குளம், குண்டல், வள்ளியூா், பூச்சிக்காடு-செட்டியாா் பண்ணை, திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, வெள்ளாளன்விளை, கொட்டங்காடு, குலசேகரன்பட்டினம், படுக்கப்பத்து உள்ளிட்ட 32 அணிகள் கலந்து கொண்டன்.

முதல் நாள் போட்டியை அரசூா் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தலைமையில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் இந்தரகாசி முன்னிலையில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் பாலமுருகன் தொடங்கி வைத்தாா்.

இறுதிப் போட்டியில் பூச்சிக்காடு- செட்டியாா்பண்ணை அணியை எதிா்த்து கோல்டன் ஈகிள் கிரிக்கெட் கிளப் அணியினா் மோதினா். இதில் பூச்சிக்காடு செட்டியாா் பண்ணை அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ.20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை பெற்றது.

2ஆம் பரிசான ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை கோல்டன் ஈகிள் கிரிக்கெட் கிளப் அணிக்கும், 3ஆம் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை குண்டல் ஆா்கேஎஸ் அணிக்கு கிடைத்தது. 4ஆம் பரிசான ரூ.5 ஆயிரம் கன்னியாகுமரி ஏஜிஐ அணிக்கும், 5ஆம் பரிசான ரூ. 3 ஆயிரம் திசையன்விளை மணலிவிளை அணிக்கும் கிடைத்தது.

போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக குண்டல் அணியைச் சோ்ந்த ஜெனில் தோ்வு பெற்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சித் தலைவா் தினேஷ்ரோஜசிங், மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஒன்றிய திமுக பொறுப்பாளா் பாலமுருகன் ஆகியோா் பரிசு வழங்கினா்.

இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, அரசூா் ஊராட்சி திமுக செயலா் ராஜபாண்டி, துணைச் செயலா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com