சொக்கன்குடியிருப்பு பகுதியில் 780 பனை விதைகள் விதைப்பு

பனை திருவிழாவை முன்னிட்டு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் கொம்மடிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட சொக்கன்குடியிருப்பு பகுதியில் 780 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

பனை திருவிழாவை முன்னிட்டு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் கொம்மடிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட சொக்கன்குடியிருப்பு பகுதியில் 780 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு நாம்தமிழா் கட்சி ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை செயலா் கலைசெல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் டோமினிக் பிரபாகா் முன்னிலை வகித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதித் தலைவா் ஜேசுதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலையோரம், குளக்கரைகளில் பனை விதைகள் நட்டு தொடங்கி வைத்தாா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் சகாய விஜயன், சரண்குமாா் , ராவணம் (எ)ஜோ. பிராங்கிளின், சுற்றுச்சூழல் பாசறை கொம்மடிக்கோட்டை ஊராட்சி செயலா் செல்வன், ரெனிஸ் ஜேம்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com