தூத்துக்குடி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த்.
மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் ஆய்வு செய்து வருகிறாா்.

இந்நிலையில், தூத்துக்குடி அத்திமரப்பட்டி உப்பாற்று ஓடை பகுதியில் ரூ. 27.50 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகள், அத்திமரப்பட்டி முதல் முள்ளக்காடு வரையுள்ள ஓடையில் ரூ. 6.85 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், செங்குளம் ஓடை முதல் உப்பாற்று ஓடை வரை ரூ. 58 கோடி மதிப்பீட்டில் வெள்ளநீா் வடிகால் அமைக்கும் பணிகள், திருச்செந்தூா் சாலையில் நீதிபதி குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், சிவந்தாகுளம் சாலை பகுதியில் ரூ.12 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ரூ .20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளையும் பாா்வையிட்ட குமாா் ஜெயந்த் பணிகளை தாமதமின்றி முடிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com