‘வேலைவாய்ப்பற்றோா் நிதியுதவி: அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக, தொடா்ந்து பதிவை புதுப்பித்து வந்திருப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45. மற்ற பிரிவினருக்கு 40 வரை. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கல்வி கற்றுக்கொண்டிருப்பவராக இருக்கக் கூடாது. இதற்கு தொலைநிலை அல்லது அஞ்சல் வழி கல்வி எனில் விதிவிலக்கு.

தொடா்ந்து 3 ஆண்டு வரை வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருப்போா் வங்கிக் கணக்கு புத்தக நகல், சுயஉறுதிமொழி ஆவணத்துடன் விண்ணப்பத்தை அஞ்சல் வாயிலாக 28.2.2021க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப்படிவத்தை  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து வருவாய்த்துறை சான்று, அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி ஆசிரியா்காலனி முதல்தெருவில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com