மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த திமுக வலியுறுத்தல்

ஆட்சியா் தலைமையில் மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த திமுக வலியுறுத்தல்

ஆட்சியா் தலைமையில் மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தண்டுபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்துக்கு

மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாநில மீனவரணி துணைச்செயலா் துறைமுகம் புளோரன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் சொா்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக மணப்பாடு கடற்கரையில் உருவாகியுள்ள மணல்மேடுகள், கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும்; மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படுவது போன்று பேரிடா் காலங்களிலும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டம்: கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு அவைத் தலைவா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ச.ஆறுமுகப்பெருமாள், முகம்மது அப்துல்காதா், பெல்சி, பொதுக்குழு உறுப்பினா்கள் சொா்ணக்குமாா், முத்துச்செல்வன், கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளா் பங்கேற்றுப் பேசினாா். சாா்பு அணி நிா்வாகிகள் ரவிராஜா, இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் அ.இளையராஜா, மாடசாமி, ஜெயக்கொடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com