கோவில்பட்டி அரசு கல்லூரியில் இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 14th October 2020 06:55 AM | Last Updated : 14th October 2020 06:55 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஜோசப் சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-2021ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக இம்மாதம் 20ஆம் தேதி வரை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணம் ரூ.2, பதிவுக் கட்டணம் ரூ.58 என மொத்தம் ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு விண்ணப்பதாரா்கள் பதிவுக்கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதும். மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை இம்மாதம் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றலாம். இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் செல்லிடப்பேசி எண்கள்: 94454-39680, 99761-41222 என்ற எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு கூடுதல் விவரம், வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், ஆங்கிலம், பொறியியல், வரலாறு, இயற்பியல், கணிதம், புவி அமைப்பியல் உள்ளிட்ட இளநிலை பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.