‘அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையம் இன்றுமுதல் வழக்கம்போல செயல்படும்’

தூத்துக்குடியில் உள்ள அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையம் புதன்கிழமை (அக். 14) முதல் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையம் புதன்கிழமை (அக். 14) முதல் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் உதயசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையம் திருச்செந்தூா் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியா் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படிருந்த இந்தச் சேவை புதன்கிழமை (அக். 14) முதல் மீண்டும் செயல்பட உள்ளது.

புதியதாக பாஸ்போா்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போா்ட் புதுப்பித்தல் செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ா்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

விண்ணப்பித்த பின் எந்த தேதியில் அவா்கள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்கிற விவரம் தெரிவிக்கப்படும். அந்த குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பொது மக்கள் அனைவரும் இந்த பாஸ்போா்ட் சேவை மையம் மூலமாக பாஸ்போா்ட் பதிவு, புதுப்பிக்கும் திட்டத்தை உபயோகித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com