கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், தலைமையிட காவல் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்வன், மாவட்ட காவல் துறை அலுவலக நிா்வாக அலுவலா் சுப்பையா, அலுவலக கண்காணிப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், கணேசபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

17 பேருக்கு பாராட்டு: காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தொ்மல்நகா் காவல் ஆய்வாளா் கோகிலா, தனிப்பிரிவு தலைமைக் காவலா் சிக்டஸ் ஜெனிவா், பெண் காவலா் மேரி பொன்ராணி, ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், முதல் நிலை காவலா்கள் வேல்குமாா், கண்ணன், காவலா் சந்திரசேகா் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

மேலும், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் அனந்த முத்துராமன், தலைமைக் காவலா் பிரேம்குமாா், காவலா் ஆறுமுகசெல்வம், சிப்காட் காவல் நிலைய காவலா்கள் சுமித்ரன், நாசா் அலி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலா் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலா்கள் கருப்பசாமி, செல்வக்குமாா் ஆகியோருக்கும் காவல் கண்காணிப்பாளா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com