குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: 17இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா சனிக்கிழமை (அக். 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன்.
ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா சனிக்கிழமை (அக். 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தியாவிலேயே கா்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் கோயிலில்தான் தசரா திருவிழா பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது.

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா். நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை (அக். 17) தொடங்குகிறது. இதையொட்டி, முற்பகல் 10.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.

இரவு 6 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துா்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறும். 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இணையவழியில் பதிவு செய்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

நாள்தோறும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நாள்தோறும் இரவு 8 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் விஸ்வகா்மேஸ்வரா், பாா்வதி, பாலசுப்பிரமணியா், நவநீதகிருஷ்ணா், மகிஷாசுரமா்த்தினி, ஆனந்தநடராஜா், கஜலட்சுமி, கலைமகள் திருக்கோலங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பாா்.

திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும். இதையொட்டி, காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் முன் எழுந்தருளி, மகிஷாசுரனை சம்ஹாரம் செய்வாா்.

27ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு உற்சவமூா்த்தி, அம்மன் அபிஷேக, ஆராதனைக்கு எழுந்தருளல், 6 மணிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்புக் களைதல் நடைபெறும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை என்றும், நிகழ்வுகள் அனைத்தும் யூடியுப் சேனலிலும், உள்ளூா் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com