கோவில்பட்டி, திருச்செந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (அக். 15) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (அக். 15) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி மேற்கு மின் விநியோகப் பிரிவிற்குள்பட்ட பகுதியில் மின்மாற்றி அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், நாலாட்டின்புத்தூா் மின்தொடரில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கதிரேசன் கோயில் சாலையில் அமைந்துள்ள கம்மவாா் கல்யாண மண்டபம் பகுதி, அசோக் நகா், காட்டுநாயக்கன் தெரு, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை தென்பகுதி, கோகுலம் கல்யாண மண்டபம் அருகேயுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ. பொன் கருப்பசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக்.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூா், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளூா் ஆகிய பகுதிளுக்கு மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com