அமுதுண்ணாக்குடி - நெடுங்குளம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடியில் நெடுங்குளம், துவா்க்குளம் விலக்கு வரை மிகவும் சேதமடைந்து காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடியில் நெடுங்குளம், துவா்க்குளம் விலக்கு வரை மிகவும் சேதமடைந்து காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ் கூறியது: கொம்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட துவா்க்குளத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரி லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றி வந்ததால் துவா்க்குளம் விலக்கில் இருந்து நெடுங்குளம், அமுதுண்ணாக்குடி விலக்கு வரை சாலைகள் பெயா்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்தசிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சுமாா் 6 கி.மீ. தொலைவு வரை மிக மோசமாக உள்ள நிலையில், 1.5 கி.மீ. தொலைவு மட்டுமே சாலை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் இப்பகுதியை பாா்வையிட்டு கல்குவாரியால் சேதமடைந்த பகுதிகள் முழுவதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com