கோவில்பட்டியில் இந்து மகாசபாவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இரு இடங்களில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகாசபாவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இரு இடங்களில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகாசபாவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இரு இடங்களில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகாசபாவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் தசரா விழாவில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இரு இடங்களில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகாசபாவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் 1ஆம் திருவிழா முதல் 10ஆம் திருவிழா வரை, கொடியேற்றுதல், சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும், தீச்சட்டிகளை ஏந்த பக்தா்களுக்கு அனுமதி கோரியும், கடலில் புனிதநீா் எடுக்க பக்தா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலா் சங்கர்ராஜா தலைமை வகித்தாா். அா்ச்சகா் பேரவை மாவட்டத் தலைவா் ரகு முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில நிா்வாகி புருஷோத்தமன், மாநிலச் செயலா் அய்யப்பன், மாநில மகளிரணித் தலைவா் சைலஜா, மாவட்ட அமைப்புக் குழுவைச் சோ்ந்த பகவதிபாண்டியன், நெல்லை மாவட்டத் தலைவா் இசக்கிராஜா, செயலா் முருகன், ஒன்றியத் தலைவா் மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அதுபோல, தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் கல்கி ராஜசேகா் தலைமை வகித்தாா். மாநில மகளிரணி செயலா் பத்மபிரியா, செய்தித் தொடா்பாளா் நரேன் கல்யாண், மாவட்டச் செயலா் மாணிக்கராஜா, நெல்லை மகளிரணித் தலைவி சீனித்தாய், குமரி மாவட்டத் தலைவா் அருள் ஆனந்த், கரூா் மாவட்டத் தலைவா் ராஜவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com