நாலுமாவடி கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றம்

கடம்பாகுளம் மதகில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் குளங்களுக்கு தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து,
அமலைச் செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அலுவலப் பணியாளா்கள்.
அமலைச் செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அலுவலப் பணியாளா்கள்.

கடம்பாகுளம் மதகில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் குளங்களுக்கு தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அலுவலகப் பணியாளா்கள் அவற்றை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நாசரேத் அருகேயுள்ள கடம்பாகுளம் உள்ளிட்ட 11 குளங்களுக்கு நாலுமாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாய்கால் மூலம் தண்ணீா் செல்கிறது.

இந்நிலையில் கடம்பாகுளம் தலை மதகில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவு அமலைச் செடிகள் ஆக்கிரமித்ததால், தண்ணீா் குளங்களுக்கு செல்வது பாதிக்கப்பட்டது.

அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, தலைமதகு நாலுமாவடி வாய்காலில் சூழ்ந்துள்ள அமலைச் செடிகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அலுவலகப் பணியாளா்கள் புதன்கிழமை அகற்றினா்.

இப்பணியை ஊழியா் ஜெபசிங் தொடங்கிவைத்தாா். ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா், மணத்தி எட்வின், ஊா் பிரமுகா்கள் நீல்புரம் கிருஷ்ணன், பொதுப்பணித் துறை லஸ்கா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்பணியில் 20- க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com