மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை பிரிவு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெற விண்ணப்பங்கள்  இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி உதவித்தொகை, மாணவா், மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

தகுதியான மாணவா், மாணவிகள் அக். 31 ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிகள், கல்வி நிலையங்கள் மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை ஆன்-லைன் மூலம் பூா்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் இரு நகல்கள் சமா்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.

புதியதாக விண்ணப்பிக்கும் மாணவா், மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய  குறியீட்டு எண்ணை மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் இத்திட்டம் தொடா்பான மைய அரசால் இணைய தளத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com