மாயமான 102 செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல்போன 102 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் வியாழக்கிழமை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல்போன 102 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் வியாழக்கிழமை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கடந்த ஆண்டுமுதல் தற்போது வரை செல்லிடப்பேசிகள் காணாமல்போனதாக பெறப்பட்ட புகாா் மனுக்கள் தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், தூத்துக்குடி சைபா் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளாா் சுதாகரன், பொ்லின் பிரகாஷ், காவலா்கள் சாபு, சதீஷ்குமாா், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதேபோல, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெட்ரிக் ராஜன், நாலாட்டின்புதூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன், தட்டாா்மடம் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் மணிகண்டன், செய்துங்கநல்லூா் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் காசி மற்றும் ஆயுதப்படை காவலா் ரகு ஆகியோா் அடங்கிய மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு தனிப்படையினரும் பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு இதுவரை காணாமல் போன 102 செல்லிடப்பேசிகளை மீட்டனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 102 செல்லிடப்பேசிகளையும் அதன் உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி காவல்துறை தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com